நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி பொதுமக்கள் வரத்து இல்லாததால் கந்தர்வகோட்டை வாரச்சந்தை வெறிச்

கந்தர்வகோட்டை, மார்ச் 26:நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியால் கந்தர்வகோட்டை வாரச்சந்தை வெறிச்சோடிக்கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கிபட்டி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று அல்லது நான்கு பேர் ஒன்று சேர்ந்து காய்கறிகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்வார்கள். இரவு கடையை முடித்துக் கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து வாகனத்தில் செல்வது வழக்கம்.

நான்கு வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்த பணம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்குமாம் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் இருப்பதால் அதிக அளவு பணத்தை எடுத்து சென்றல் இருப்பு பணம் என பறக்கும் படை பணத்தை பறிமுதல் செய்வார்கள் என பயந்து தேர்தல் வரை வியாபாரத்தை குறைத்துள்ளனர். இதனால் கந்தர்வகோட்டை வார சந்தை வெறிச்சொடியது. வியபாரிகள் கூறும்போது இந்திய தேர்தல் ஆணையம் வியாபாரிகள் 2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி அளித்தால்தான் வியாபாரம் சிரமம் இல்லாமல் தொழில் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். வார சந்தையில் கடை குறைந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

The post நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி பொதுமக்கள் வரத்து இல்லாததால் கந்தர்வகோட்டை வாரச்சந்தை வெறிச் appeared first on Dinakaran.

Related Stories: