கந்தர்வகோட்டை அருகே உலக வானிலை தின கட்டுரை போட்டி

கந்தர்வகோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக வானிலை தினம் குறித்து கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு துளிர் இதழ் வழங்கி பாராட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, உலக வானிலை தினம் குறித்து பேசியதாவது: உலக வானிலை அமைப்பின் நோக்கம் பூமியின் வளிமண்டலம் எவ்வாறு செயல்படுகிறது.

கடல்கள் மற்றும் நிலங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது மற்றும் இதன் விளைவாக ஏற்படும் காலநிலை, வானிலை மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதும் அளவிடுவதும் ஆகும். மேலும் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு நாளும் தாக்கும் இந்தக் குழு மற்றும் அதன் பின்னணியில் உள்ள அறிவியலின் கொண்டாட்டமே உலக வானிலை தினம். 1961 ஆம் ஆண்டு முதல், உலக வானிலை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை செயல்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உழைத்து வருகிறது என்று கூறினார் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் மாரியம்மாள் செய்திருந்தார்.

The post கந்தர்வகோட்டை அருகே உலக வானிலை தின கட்டுரை போட்டி appeared first on Dinakaran.

Related Stories: