மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை, மார்ச் 26: மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து, இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் நடைபெற்றது.

மயிலாடுதுறை டிஇஎல்சி பரிசுத்த இம்மானுவேல் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தமிழக அன்பிய பணிக்குழு செயலாளர் ஜான்போஸ்கோ அடிகளார் என்ற தலைப்பில் மறையுரையாற்றினார். மயிலாடுதுறை தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குலுத்தோலைகளை ஏந்தி வீதி உலா வந்தனர்.

The post மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி appeared first on Dinakaran.

Related Stories: