கட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசு சமுதாய கூடங்களை பயன்படுத்த கூடாது

சிவகங்கை, மார்ச் 26: அரசு சமுதாய கூடங்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். பல்வேறு கட்சிகள் சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், செயல் வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவில், திருமணம் நடக்கும் இடங்கள், மருத்துவமணை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமணைகள் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது.

போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களில் பிறர் மனதை புண்படுத்தும்படியான வாசகங்கள் இடம் பெறக்கூடாது. அரசு சமுதாயக்கூடங்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது. ஊராட்சி பகுதிகளில் தனியாரிடம் அனுமதி பெற்றே சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். தனியார் பள்ளி, தனியார் மருத்துவமணை, கோவில் சுவர்கள், குடிநீர் தொட்டி, பஸ் ஸ்டாப், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்யக்கூடாது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலங்கள் நடத்த முன் அனுமதி கோரி விண்ணப்பம் வழங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசு சமுதாய கூடங்களை பயன்படுத்த கூடாது appeared first on Dinakaran.

Related Stories: