சிவசேனா முதல்பட்டியல் உத்தவ் இன்று ரிலீஸ்

மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு வேட்பாளர் பட்டியல் இன்று வௌியிடப்படுகிறது. மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று மூத்த தலைவர் சஞ்சய்ராவத் அறிவித்துள்ளார். இன்று 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். அங்கு ஏப்.19 முதல் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட வேண்டிய சூழல் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

The post சிவசேனா முதல்பட்டியல் உத்தவ் இன்று ரிலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: