வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் 9,248 அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

 

விருதுநகர், மார்ச் 25: நாடாளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறை குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றன.

வாக்குச்சாவடி பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 என வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப் பட உள்ளனர் அதன்அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் குறித்த பயிற்சி அளித்தனர்.

ராஜபாளையம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற பி.ஏ. சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1,330 அலுவலர்களுக்கும், திருவில்லிபுத்து£ர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1,322 அலுவலர்களுக்கும், சாத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் 1,283 அலுவலர்களுக்கும், சிவகாசி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.எச்.என்.வி மேல்நிலைப் பள்ளியில் 1,444 அலுவலர்களுக்கும், விருதுநகர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் 1,256 அலுவலர்களுக்கும்,

அருப்புக்கோட்டை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற தேவாங்கர் கல்லூரியில் 978 அலுவலர்களுக்கும், திருச்சுழி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற சேது தொழில்நுட்ப கல்லூரியில் 1,635 அலுவலர்களுக்கும் என மொத்தம் 9,248 அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற ராஜபாளையம் பிஏசிஆர் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்எச்என்வி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டார். உடன் டிஆர்ஓ ராஜேந்திரன், கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் 9,248 அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: