திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஊஞ்சல் உற்சவம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் பிரசித்திபெற்ற முள்ளாட்சி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் 80 ம் ஆண்டு பங்குனி பெருந்திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி தீமிதியும், 19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி மலர் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க மண்டகப்படி முன்னிட்டு காலையிலிருந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் தீப ஆராதனைகள் சிறப்பு வழிபாடுகள் மாவிளக்கு போடுதல் அர்ச்சனை செய்தல் பாலாபிஷேகம் செய்தல் என சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பின்பு சாமிக்கு ஏராளமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அமர வைத்து விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மலர் வணிக சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செல்வகணபதி மற்றும் பொறுப்பாளர்கள் கோயில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஊஞ்சல் உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: