கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றிகோழிப்பண்ணைக்கு எடுத்து சென்ற ₹1.27 லட்சம் பறிமுதல்

கே.வி.குப்பம், மார்ச் 24: கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றி கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்ற ₹1.27 லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காட்பாடி- குடியாத்தம் சாலை கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூரில், ஆர்.எஸ்.சாலை சந்திப்பில் வாகனதணிக்கை நடத்தினர்.

அப்போது, கோழிப்பண்ணைக்கு சென்ற லோடு வேனை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர். அதில் ₹1 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது. பணம் குறித்து விசாரித்தபோது, கோழிப்பண்ணைக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

The post கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றிகோழிப்பண்ணைக்கு எடுத்து சென்ற ₹1.27 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: