திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்

திருச்செந்தூர், மார்ச் 24:திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. இவற்றில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதேபோல நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 108 ஏக்கர் நிலம் உள்ளது.

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவியில் உள்ள நிலத்தினை ஆய்வு செய்யும் பணியில் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், தனி தாசில்தார், நில அளவையர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 10 தினங்களாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி முதற்கட்டமாக சுமார் 25 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 155 இடங்களில் பார்த்தவுடன் தெரியும் வகையில் உயரமான நில அளவீடு கற்கள் நடப்பட்டன. இப்பணிகள் கோயிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்கள் மற்றும் இடங்களில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: