புளியரை அருகே பறக்கும் படையினர் அதிரடி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு சென்ற ₹2.70 லட்சம் பறிமுதல்

செங்கோட்டை,மார்ச் 24: தமிழகம் – கேரளா எல்லையான புளியரை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹2.70 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, ஆலங்குளம், அம்பாமுத்திரம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம்-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மாடு வாங்க வந்த மாட்டு வியாபாரி நிஜாம் என்பவரிடம் ₹1 லட்சத்து 10 ஆயிரமும், புனலூர் அருகே அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி முகமது ஆசிப் கான் என்பவரிடம் ₹70 ஆயிரமும், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் நாயர் என்பவரிடமிருந்து ₹90 ஆயிரம் ரொக்கம் கொண்டு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்களிடம் முறையான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த ₹2.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post புளியரை அருகே பறக்கும் படையினர் அதிரடி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு சென்ற ₹2.70 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: