டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்: காட்பாடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிரடி

வேலூர், மார்ச் 23: ட்பாடி கசம் பகுதியில் மறைவிடத்தில் வைத்து விற்ற 33 பீர் பாட்டில்கள், 248 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் மற்றும் சேர்க்காட்டில் 70 பட்டுச்சேலைகள் கைப்பற்றப்பட்டன. டாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் சுற்றி வருகின்றன. அதேபோல் டாஸ்மாக் நிர்வாகமும் தனது சில்லரை விற்பனை கடைகளில் மதுபான விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் காட்பாடி கசம் பகுதியில் ரமேஷ் தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று நடத்திய அதிரடி வேட்டையில் அங்குள்ள டாஸ்மாக் பார் அருகில் புதர் மறைவில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்று வந்த வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்த செல்வகுமார்(எ)விஜயகுமார்(42) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 33 பீர் பாட்டில்கள், 248 குவார்ட்டர் பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ₹1,890 கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ₹36 ஆயிரமாகும்.

பிடிப்பட்ட செல்வகுமார், திருவலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சரக்கு பாட்டில்கள் காட்பாடி தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ரமேஷ் தலைமையில் நிலைகண்காணிப்பு குழுவினர் திருவலம் சேர்க்காடு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ₹4 லட்சத்து 44 ஆயிரத்து 945 மதிப்புள்ள 70 பட்டுப்புடவைகளை கைப்பற்றி, அதனை காரில் எடுத்து சென்ற ஆந்திர மாநிலம் மதனப்பல்லியை சேர்ந்த ஞானேந்திரா என்பவரை காட்பாடி தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

The post டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்: காட்பாடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: