தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல்அலுவலர் ஆய்வு

தூத்துக்குடி, மார்ச் 23: தூத்துக்குடி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான லட்சுமிபதி பார்வையிட்டார். தூத்துக்குடி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள வஉசி அரசு பொறியியல் கல்லூரியை தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணிய பாலசந்தர், உதவி தேர்தல் அலுவலர்கள் பிரபு (தூத்துக்குடி), உமா (விளாத்திகுளம்), சுகுமார் (திருச்செந்தூர்), விக்னேஷ் (வைகுண்டம்), கிருஷ்ணகுமார் (ஓட்டப்பிடாரம்), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு, பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), கோபால் (ஏரல்), வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர்தேவராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல்அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: