கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தீவிர பணி

கோவில்பட்டி, மார்ச் 23: ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தீவிர பணியாற்ற வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மந்தித்தோப்பு சாலை சர்க்கஸ் மைதானத்தில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொன்னுசாமி பாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நகராட்சி சேர்மனும், நகர செயலாளருமான கருணாநிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தூத்துக்குடியில் பணியாற்றக்கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளித்தீர்கள். தூத்துக்குடியை என்னுடைய இரண்டாவது தாய் வீடாக மாறக்கூடிய அளவிற்கு இங்கே இருக்கக்கூடிய மக்களுடைய அன்பு, பாசம் என்பது எனக்கு கிடைத்தது. நம்முடைய வெற்றி நாற்பதும் நமதே இந்த நாடும் நமதே என்று சொல்லக் கூடிய அளவிற்கு முழுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

இப்படி தமிழ்நாட்டை தென் மாநிலங்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கக்கூடிய பாஜ, ஆட்சியில் இல்லாத மாநிலங்களையும் வஞ்சித்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றி காட்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் கூட்டணி ஆட்சி அமைக்கும். அது அமைந்த பிறகு விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அதேபோன்று மாணவர்களுடைய கல்வி கடன் ரத்து செய்யப்படும். காலை உணவு திட்டம் என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய அத்தனை அரசு பள்ளிகளில் கொண்டு வரப்படும். பெட்ரோல் விலை 75 ரூபாய் குறைக்கப்படும். டீசல் விலை 65 ரூபாய். கேஸ் சிலிண்டர் 500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி நாற்பதும் நமதே என்ற அளவில் மகத்தான வெற்றி பெற அனைவரும் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ‘பெரிய முதலாளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்று ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. இதற்கு சரியான படம் கற்பிக்க வேண்டும். மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் பிரச்னை உண்டாக்க அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாம் சிந்தித்து வாக்களித்து ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட செய்ய வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கமாரியம்மாள், பிரியா குருராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தானம், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவசுப்பிரமணியன், பீட்டர், ராமர், திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அழகர்சாமி, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜா, ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன், நாலாட்டின்புத்தூர் கிளைச் செயலாளர் புவனேஸ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா.மணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, மாரீஸ்வரன், பொருளாளர் ராமமூர்த்தி, அவைத்தலைவர் முனியசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் விஸ்வநாதராஜா, நகர துணைச் செயலாளர் அன்பழகன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதி, முத்துமாரி தாமோதரகண்ணன், பேரூராட்சி தலைவர்கள் கழுகுமலை அருணாசுப்பிரமணியன், கயத்தார் சுப்புலட்சுமி ராஜதுரை, கடம்பூர் ராஜேஸ்வரி நாகராஜா, பேரூர் செயலாளர்கள் சுரேஷ்கண்ணன், கிருஷ்ணகுமார், பாலகுமார், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கரும்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விசிக மாவட்ட செயலாளர் முருகன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அஸ்மத், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமை ராமர்பாண்டியன், ஆதி தமிழர் பேரவை முத்துக்குமார், ஆதி தமிழர் கட்சி நம்பிராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தீவிர பணி appeared first on Dinakaran.

Related Stories: