வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடப்பாண்டில் மாவட்டத்தில் 2.17 லட்சம் ஏக்கரில் சாகுபடி உளுந்து, பச்சைப்பயறு அறுவடை பணி

திருவாரூர், மார்ச் 23: திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சை பயிர் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம்தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஜுன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கடந்த 2022ம் ஆண்டில் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டிலும் ஜுன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.

இவ்வாறு 3 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான குறுவை சாகுபடி பரப்பான 97 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதேபோல் சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் மாவட்டத்தில் 3 ஆண்டு காலமாக 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கரில் இந்த உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது இதற்கான அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடப்பாண்டில் மாவட்டத்தில் 2.17 லட்சம் ஏக்கரில் சாகுபடி உளுந்து, பச்சைப்பயறு அறுவடை பணி appeared first on Dinakaran.

Related Stories: