பறிமுதல் செய்த ₹4.61 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 23: தஞ்சாவூரில் நேற்று பறக்கும் படை குழு பரிசோதனையில் ரூ.64000, ரூ.97,190, ரூ.70,000, ரூ.84,000 மற்றும் ரூ.1,16,000 என மொத்தம் ரூ.4.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஆவணங்கள் மற்றும் விசாரணையையடுத்து அந்த தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் ஆவணங்களை சமர்பித்து விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பிரசார வாகனத்தில் எண், மேடையின் அளவு, மேடையில் போடியம், ரோஸ்ட்ரம் வகை, சாதாரண நாற்காலிகள், வி.ஐ.பி. நாற்காலிகள், பந்தல் அளவு, தோரணங்கள் விவரம், எத்தனை வரிசை நாற்காலிகள், கட் அவுட்கள் வகை, எண்ணிக்கை, மின்சார பல்புகள், சீரியல் பல்புகள் போன்றவற்றையும் கணித்து அறிக்கையளிக்கும்.

செலவின அறிக்கையை கணக்கு குழுவிற்கு அனுப்பும். தேர்தல் செலவை கணக்கிடும் குழு தேர்தல் செலவைக் கணக்கிட ஒரு அலுவலர் மற்றும் உதவியாளர் ஒருவர் தொகுதி வாரியாக நியமிக்கப்படுவர். விளக்கமளிக்க இயலாத ஆதாரமில்லாமல் எடுத்துச் செலல்லப்படும் தொகைகள் வாக்காளர்களுக்கு கையூட்டும் கொடுப்பதற்கு எடுத்துச் செல்வதாக கருதி கைப்பற்றுகை செய்யும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும். பணமாக இருப்பின் ரூ.50,000க்கு மேலும் மற்றும் பொருளாக ரூ.10,000க்கு மேலும் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் செலவின் வகைகளாக, வேட்பாளரால் செய்யப்படும் தேர்தல் செலவு சட்டத்திற்கு உட்பட்ட செலவு, சட்டத்திற்கும் விதிகளுக்கும் புறம்பான செலவு என இரு வகையாக கணக்கிடப்படும். வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்தல், மதுபானம் விநியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக அளிக்கப்படும் பரிசுப் பொருட்கள் ஆகியன சட்டத்திற்கு புறம்பான தேர்தல் செலவினங்களாகும். இம்மாதிரி செலவுகள் மீது இந்திய தண்டனை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வேட்பாளருக்கு சாதகமாக அவர்களின் சாதனைகள் பற்றியோ, அவர் நற்பண்பு கொண்டவர், மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என்றோ அல்லது இதர விவரங்கள் பற்றியோ பத்திரிகைகளில் செய்தி போல் வெளியிடப்படுகின்ற விவரங்களும் வேட்பாளர் செலவு செய்து விளம்பரம் கொடுத்ததாகவே கட்டணச் செய்தி, விளம்பரமாக கணக்கிடப்படும்.

 

The post பறிமுதல் செய்த ₹4.61 லட்சம் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: