வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிப்பு வந்து 3 நாளாச்சு! வேட்பு மனுதாக்கலே இல்லை

தஞ்சாவூர், மார்ச் 23: வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக. அதிமுக, பாஜ கூட்டணிகள் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மார்ச் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஆனால் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இருந்தே வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்குவார்கள். ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சாவூர் தொகுதிக்கு நேற்று வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்சைகள் 11 பேர் உட்பட 26 பேர் படிவம் பெற்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிப்பு வந்து 3 நாளாச்சு! வேட்பு மனுதாக்கலே இல்லை appeared first on Dinakaran.

Related Stories: