1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு

புதுக்கோட்டை, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தொடங்கி வைத்தார். இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடியில் பணிபுரியவுள்ள தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, தமிழகம் முழுவதும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று 1,560 வாக்குச்சாவடிகளில், 7,648 தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றிட உள்ளார்கள். இவர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்).வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் (தேர்தல்)சோனை கருப்பையா, ஜான்பால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: