பிளஸ்2 பொதுத்தேர்வு நிறைவு: மாணவிகள் கலர் பொடி பூசி உற்சாகம்

புதுக்கோட்டை, மார்ச் 23: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நேற்று முடிவு அடைந்ததை அடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை பூசிக்கொண்டும், சக தோழிகளோடு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் அதை ஊட்டியும், முகத்தில் கேக்குகளை பூசிக்கொண்டும் பேனா மையை தெளித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் பிரியா விடை கொடுத்து சென்றனர்

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி புதுக்கோட்டை என இரண்டு கல்வி மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 98 தேர்வு மையங்களில் 18,258 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்து தேர்வை எழுதி வந்தனர். இந்நிலையில் நேற்றுடன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு அடைந்ததை அடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை பூசிக்கொண்டும் சக தோழிகளோடு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் அதை ஊட்டியும் முகத்தில் கேக்குகளை பூசிக்கொண்டும் பேனா மையை தெளித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் பிரியா விடை கொடுத்து சென்றனர்.

The post பிளஸ்2 பொதுத்தேர்வு நிறைவு: மாணவிகள் கலர் பொடி பூசி உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: