ஹோலி பண்டிகை நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில்

 

நாகர்கோவில், மார்ச் 23 : ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. அதன்படி வருகிற 25ம்தேதி தாம்பரம் – நாகர்கோவில் (வண்டி எண் 06011) இயக்கப்படுகிறது. வரும் 24ம் தேதி மற்றும் 31ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் (வண்டி எண் 06012) இயக்கப்படுகிறது. 24ம்தேதி நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் (வண்டி எண் 06019) இயக்கப்படுகிறது. 25ம்தேதி சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் (வண்டி எண் 06020) இயக்கப்படுகிறது. 28ம்தேதி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (வண்டி எண் 06067) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

The post ஹோலி பண்டிகை நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: