போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி

உசிலம்பட்டி, மார்ச் 23: உசிலம்பட்டியில், கவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படையினர் பங்கேற்ற போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை என்சிசி கமாண்டென்ட் தாமோதரன் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி கவுண்டன்பட்டி சாலை, பேரையூர் மெயின் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் பொதுமக்களிடம் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியதுடன், அவர்களிடம் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் என்சிசி அதிகாரி சரவணன் செய்திருந்தார். முன்னதாக, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், என்சிசி மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அகன்ற திரையில் ஒளிபரப்பானது.

The post போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: