பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. முன்னதாக, வரும் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் தனது சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் முதல்வர் தொடங்கினார். இந்நிலையில் திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; திருச்சி என்றாலே திமுகதான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. கடும் நிதி நெருக்கடியில் கூட திமுக அரசு 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என பேசினார். நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தமிழகத்திற்கு செய்த சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடியால் பட்டியலிட முடியுமா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: