விருதுநகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

விருதுநகர், மார்ச் 22: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு முதல் வேட்பாளர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியிடப்பட்டு, மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள். சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் தவிர்த்து 6 நாட்கள் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் நாள் மார்ச் 20ல் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று பிற்பகல் தமிழக மக்கள் நலக் கட்சியின் சார்பில் சாத்தூர் அருகில் உள்ள நல்லான்செட்டிபட்டியை சேர்ந்த வழக்கறிர் முத்துக்கண்ணு முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்து கணக்கை துவக்கி வைத்தார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜவும் போட்டியிட உள்ள நிலையில் மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் சார்பில் மாணிக்கம்தாகூர், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பாஜ வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காததால் தேர்தல் சூடுபிடிக்கவில்லை.

The post விருதுநகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: