பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்

 

மன்னார்குடி, மார்ச் 22: தமிழ்நாட்டில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக் குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மன்னார்குடி அடுத்த பைங்காநாடு மெயின் ரோட்டில்நேற்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் சோ தனை நடத்தியதில் அவரிடமிருந்து ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.64,390 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட நபர் மன்னார்குடி அடுத்த வடபாதி தெற்கு தெருவை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நேதாஜி (25)என்றும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.64,390ஐ தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கீர்த்தனா மணி வசம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: