2வது நாளில் வேட்பு மனுதாக்கல் இன்றி வெறிச்சோடியது 72 மனுக்கள் பெற்று சென்றனர் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட

வேலூர், மார்ச் 22: வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட 2வது நாளில் வேட்புமனுதாக்கல் இன்றி வெறிச்சோடியது. 72 மனுக்கள் நேற்று வரை கட்சியினர், சுயேட்சைகள் பெற்று சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் ேநற்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தவிர்த்து மனுதாக்கல் நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல்நாளான நேற்றுமுன்தினம் 2 வேட்பாளர்கள் 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 2வது நாளான நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி வேட்பு மனுக்களை பெற காத்திருந்தார். ஆனால் நேற்று யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மட்டும் 17 மனுக்கள் பெற்றுச்சென்றுள்ளனர். மொத்தம் 72 மனுக்களை கட்சியினரும், சுயேட்டைகளும் பெற்றுச்ெசன்றுள்ளனர்.

The post 2வது நாளில் வேட்பு மனுதாக்கல் இன்றி வெறிச்சோடியது 72 மனுக்கள் பெற்று சென்றனர் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட appeared first on Dinakaran.

Related Stories: