100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கீழப்பாவூர் பேரூராட்சியில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

பாவூர்சத்திரம், மார்ச் 22: கீழப்பாவூர் பேரூராட்சியில் நெல்லை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் 3 லட்சம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல்அலுவலர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். அலுவலக பணியாளர் தர்மராஜ் வரவேற்றார். முகாமில் பேரூராட்சியின் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து 3 லட்சம் வாக்களர்களிடம் கையெழுத்து பெறும் முகாமினை செயல் அலுவலர் மாணிக்கராஜ் தொடங்கி வைத்தார். பேரூராட்சி பணியாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார்.

The post 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கீழப்பாவூர் பேரூராட்சியில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: