வெயிலால் ஏற்படும் நோய்களை தவிர்க்க தினமும் பழம், காய்கறிகள் சாப்பிட வேண்டும்

 

புதுக்கோட்டை, மார்ச்21: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏரிகள் மற்றும் குளங்களில் நீரின்அளவு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பழவகைகள் மற்றும் தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்ப்பூசணி அதிக அளவு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பழவகைகள், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்களை அதிகளவு வாங்கிக் செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இளநீர் ரூ.45க்கும், தர்பூசணி கிலோ ரூ.30க்கும், சர்பத் ரூ.10 முதல் ரூ.30 வரைக்கும் விற்பனையாகிறது. இந்த கடும் வெயிலால் வெயில் கட்டிகள் அதிக அளவு வர வாய்ப்புண்டு. இதுபோல் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் குடிக்கும்போது தொண்டையில் வலி, இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்புண்டு. வெயிலால் உடல் அதிக அளவு வியர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியர்க்கும்போது உடலில் ஊறல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

 

The post வெயிலால் ஏற்படும் நோய்களை தவிர்க்க தினமும் பழம், காய்கறிகள் சாப்பிட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: