பாளை நூற்றாண்டு மண்டபத்தில் 24ம் தேதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

நெல்லை, மார்ச் 21: நெல்லை, நாகர்கோவிலில் மாணவர்களுக்காக இலவசமாக வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய்ஸ் இன்போ மீடியா, ஜாய் பல்கலைக்கழகம், ஜெயின் ஆகியவற்றின் சார்பில் ெதன் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நலன்கருதி அவர்களது உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நெல்லை, நாகர்கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களுக்காக இலவச வழிகாட்டி நிகழ்ச்சி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் வரும் மார்ச் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதே போல் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு எதிர்புறமுள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலில் வரும் 30ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஒரே இடத்தில் அப்ளிகேஷன் அளிப்பதோடு ஒரே இடத்தில் அட்மிஷன் வழங்கப்படுகிறது.

பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நீட், ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? அரசு மற்றும் தனியார் ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி? பொறியியல் துறையில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெறுவதற்கான படிப்புகள் என்னென்ன? பொறியியல், மருத்துவம், வேளாண், கால்நடை, பார்மசி, நர்சிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சலிங்கை எதிர்கொள்வது எப்படி? ஆகியன குறித்து சிறப்பு தகவல்களை தெரிந்துகொள்ளலாம். எனவே, அரிய இந்த வழிகாட்டி நிகழ்ச்சிகளில் அனைத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோரும் பங்கேற்று பயன்பெறலாம். கலந்துகொள்ளும் அனைவருக்கும் கல்வி வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. கலை 9 மணிக்கு வருகைதரும் முதல் 100 மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் நடிகரும், சமூகநல ஆர்வலருமான பாலா விருதுகள் வழங்கி கருத்துரை ஆற்றுகிறார்.

The post பாளை நூற்றாண்டு மண்டபத்தில் 24ம் தேதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: