ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.89 லட்சம் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 19: காட்டுமன்னார்கோவில் அடுத்த முஷ்ணம் காவல் எல்லைக்கு உட்பட்ட முஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே முஹம்மது அசேன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவனூர் பகுதியில் இருந்து முஷ்ணம் சாலையில் வேகமாக சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பைக்கை ஓட்டி வந்த வாலிபரின் கை பையில் ஆவணம் இல்லாமல் ரூ.1.34 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும்படை குழு ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வேப்பூர்: திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட அடரி கிராமத்தில் கண்காணிப்பு குழுவினர் வட்டாசியர் செந்தில்குமார் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.55,530 கைப்பற்றப்பட்டு, திட்டக்குடி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மினி லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த அருள்சாமி பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.89 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: