கன்னியாகுமரி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மார்ச் 17: கன்னியாகுமரி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு குமரி மாவட்ட பாசன துறை சார்பில் விவசாயிகள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த போராட்டகாரர்கள் சிலர் சுற்றுலா பயணிகள் வந்த வேனில் வந்தனர். அந்த சுற்றுலா வேனை பறிமுதல் செய்து லஞ்சம் பெற்ற கன்னியாகுமரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு குமரி மாவட்ட பாசனத்துறை சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புலவர் செல்லப்பா, தாணுபிள்ளை, முருகேச பிள்ளை, வழக்கறிஞர்கள் ஜெபா, ஹோமர்லால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப உதயகுமார், விவசாயிகள் சங்கத்தினர் ரவீந்திரன், தேவதாஸ், தங்கப்பன், பிரபு, சுசீலா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கன்னியாகுமரி டிஎஸ்பியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே கைது செய்துள்ளனர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சுற்றுலா வந்தவர்களுடன் வழியில் வேனில் 4 விவசாயிகள் ஏறி வந்துள்ளனர். அந்த வேனில் சுற்றுலா சென்ற பெண்கள் மற்றும் அவரது 3 வயது குழந்தையுடன் கைது செய்தனர்.

அவர்கள் வந்த தனியார் வேனையும் சிறை பிடித்து திருமண மண்டபத்திலேயே கன்னியாகுமரி டிஎஸ்பி வைத்திருந்தார். அவர்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை. வாகனத்தின் மீதும் வழக்கு போட்டு சுற்றுலா வந்த குடும்பத்திலிருந்த குழந்தையையும் மண்டபத்தில் அடைத்து விட்டனர். பின்னர் வேன் மீது வழக்கு போடுவதாக மிரட்டி முப்பதாயிரம் லஞ்சம் பெற்று விடுவித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள கன்னியா முன்னாள் எம்.பி. விஜயகுமார் பா.ஜ.வில் இணைந்தார்

The post கன்னியாகுமரி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: