வனப்பகுதியில் தீவைத்தவர்கள் கைது

 

தேவதானப்பட்டி, மார்ச் 16: தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் தேவதானப்பட்டி வனச்சரகம் பாம்பார்பிரிவு, அம்புருவி காப்புக்காடு, அம்புருவி கிழக்கு பீட், கொசு ஓடை சரகப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கொசு ஓடை சரகம் அம்புருவி காப்புக்காடு மண்மூடி பகுதியில் உள்ள கொடைக்கானல் கோட்டம் கொடைக்கானல்-தேவதானப்பட்டி வனச்சரக இணைப்பு வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அங்கு சென்ற வனத்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். வனத்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடைக்கானல், வெள்ளக்கவி பஞ்சாயத்து, சின்னூரைச் சேர்ந்த ராமன்(53) மற்றும் ஆண்டவர்(54) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் பட்டா நிலத்தில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி அதற்கு தீவைத்ததால், வனப்பகுதியில் பரவியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் தீப்பெட்டிகள் பறிமுதல் செய்த வனத்துறை வனச்சரகர் டேவிட்ராஜன் அவர்களை கைது செய்தார்.

The post வனப்பகுதியில் தீவைத்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: