நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரசில் வார் ரூம் அமைப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கி ரசில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறந்து வருகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி ஒருபுறம் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வந்தாலும், தேர்தல் கள பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தலைமையில், தேசிய அளவில் வார் ரூம் அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஏனென்றால் இந்த வார் ரூம் மூலம் தெலங்கானா, கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் வார் ரூம்களை காங்கிரஸ் தலைமை அமைத்து வருகிறது.

அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கான வார் ரூமை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்து அதற்கான நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கான வார் ரூம் தலைவராக வசந்த்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவர்களாக சுமதி அன்பரசு, பி.வி.சிவக்குமார், கிருத்திகா பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரசில் வார் ரூம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: