ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம்

சுரண்டை :ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கருவந்தா, அச்சங்குன்றம், லட்சுமிபுரம், சோலைசேரி பகுதிகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். தென்காசி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் பங்கேற்று வீடு, வீடாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களான மகளிர் பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கிராமப்புற பள்ளி மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பால்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிலிப்ராஜா, கிளைச் செயலாளர்கள் கணபதி, மாடசாமி, கணேசன், வெள்ளத்துரை, சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நகர திமுக சார்பில் 8,9,10 வார்டுகளில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று வழங்கினர். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், நகர அவைத்தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர் முத்துக்குமார்‌, வார்டு செயலாளர்கள் செந்தில்குமார், பழனிசாமி, வைரவேல், சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜவேல், ஜான்சன், ராஜா, நகர நிர்வாகிகள் வெங்கடேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

சிவகிரி: வாசுதேவநல்லூர் 11வது வார்டில் திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம், தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் லாவண்யா தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை பேச்சாளர் முத்துசாமி, திருப்பதி ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

சார்பு அணி துணை அமைப்பாளர்கள் பேராசிரியர் செல்லத்துரை, கட்டபொம்மன், அவைத்தலைவர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் பாண்டி, மரியதாஸ், ரஹீம், மாரியப்பன், சின்னத்துரை, நிர்வாகிகள் செல்வம், சிற்பி செல்லப்பா, கருத்தப்பாண்டியன், மகேந்திரன், முத்துக்கருப்பன், முருகன், திருமலைக்குமார், இளைஞரணி ஆசிக்அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சுந்தர், தமீம்அன்சாரி, சுல்தான், முத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வார்டு செயலாளர் பொறியாளர் கணேஷ்கண்ணன் நன்றி கூறினார்.

திருவேங்கடம்: குருவிகுளம் மேற்கு ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையிலும், தென்காசி எம்பி தனுஷ்குமார் முன்னிலையிலும் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் நடந்தது.நிகழ்ச்சியில் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குருவிகுளம் கலைச்செல்வன், ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் சங்குபட்டி மாரிமுத்து, கிளை செயலாளர்கள் கோபால், தங்கமாரியப்பன், மாரியப்பன், பழனிவேல் ராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: