அரசியல் சட்டத்தை திருத்துவதே பாஜ,மோடி,ஆர்எஸ்எஸ்சின் முக்கிய லட்சியம்

புதுடெல்லி: கர்நாடகா பாஜ எம்பியான அனந்தகுமார் ஹெக்டே,‘‘ இந்து மதத்திற்கான முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெறும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதை செய்ய ஏதுவாக இந்த தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜவை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், அனந்தகுமாரின் பேச்சு இந்தியாவில் ரகசியமாக சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கான மோடி- ஆர்எஸ்எஸ்சின் திட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அதன்படி அவர்களுடைய மனுசாஸ்திர நோக்கங்களை மக்கள் மீது திணித்து தலித்,பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினரின் உரிமைகளை பறித்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,‘‘பாபாசாகிப் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை அழிப்பதே மோடி, பாஜவின் முக்கிய இலட்சியம். அவர்களின் இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது. தலித்,பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும். அவர்களின் போராட்டத்துக்கு இந்தியா துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.

The post அரசியல் சட்டத்தை திருத்துவதே பாஜ,மோடி,ஆர்எஸ்எஸ்சின் முக்கிய லட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: