ராமநாதபுரம் கலெக்டருக்கு முதலமைச்சர் விருது

 

ராமநாதபுரம், மார்ச் 9: தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அதன்படி 2023- 2024ம் ஆண்டில் மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம், கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்து ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அம்மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

The post ராமநாதபுரம் கலெக்டருக்கு முதலமைச்சர் விருது appeared first on Dinakaran.

Related Stories: