கன்னங்குளத்தில் ரூ.5 லட்சத்தில் இ-சேவை, அங்கன்வாடி மையத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுவர் திறப்பு

நெல்லை, மார்ச் 9: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் லெவிஞ்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கன்னங்குளம் கிராமத்தில் கன்னங்குளம் மகளிர் சுயஉதவி குழு மற்றும் இ-சேவை மையம், அங்கன்வாடி கட்டிடங்களை சுற்றி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறப்பு விழா, மகளிர் தினத்தையொட்டி நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள், சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொன்சி, ரேணுகா, சொர்ண லதா, ஐயப்பன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னங்குளத்தில் ரூ.5 லட்சத்தில் இ-சேவை, அங்கன்வாடி மையத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுவர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: