5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளை சேர்க்க மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, மார்ச் 8: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024 -25 ம் கல்வியாண்டில் 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் முதல் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பே ரணி வட்டாரக் கல்வி அலுவலர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். எம்.எல்.ஏ மாரிமுத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

கோட்டூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி களைச் சார்ந்த மாணவ மாணவிகள் 200 பேர் கலந்து கொண்ட பேரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி கடைத்தெரு, காவல் நிலையம், சிவன் கோயில் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

மாணவர்கள் “பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளியில் சேர்ப்போம், அனைவரும் கற்போம் அகிலத்தை ஆள்வோம்” போன்ற விழிப் புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகள் மற்றும் வாசகங்களை முழங்கினர். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் வித்யா, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இளம்பரிதி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கள் திலகவதி, தங்கபாபு, ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன் வரவேற்றார். பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயதீபா நன்றி கூறினார்.

The post 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளை சேர்க்க மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: