கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும்

நீடாமங்கலம், மார்ச் 7: கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கொரடாச்சேரி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் உமாப்பிரியா பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ) விஸ்வநாதன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) கண்ணன் தீர்மானங்களை படித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:
கூட்டத்தில் நாகூரான்(அதிமுக) பேசுகையில், தேவையான திட்டங்கள் செயல்படுத்திவரும் பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏக்கு நன்றி. உத்திரங்குடி தார் சாலை அமைத்ததற்கு நன்றி. உத்திரங்குடி ஆதி திராவிடர் தெரு சாலை அமைத்து தர வேண்டும். அபிவிர்தீஸ்வரம் ஈமகிரி மண்டபம் அமைத்து தர வேண்டும் என்றார். சத்தியேந்திரன் (திமுக) பேசுகையில், எண்கண் ஊராட்சியில் பள்ளி சுற்று சுவர் அமைத்து தர வேண்டும். எண்கண் ரெகுலேட்டர் சீரமைக்க உதவியதற்கு நன்றி. காப்பனாமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும் என்றார்.

கவிதா (சிபிஐ கட்சி) பேசுகையில், அத்திசோழமங்கலம் தண்ணீர் டேங் கட்டித்தர வேண்டும். கொடிமங்கலம் ஊராட்சியில் சமுதாய கூடம் வேண்டும். ரேஷன் கடையில் 200 மில்லி மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
அதற்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.
மீரா(அதிமுக) பேசுகையில் காவாக்குடிக்கு குடிநீர் டேங்க் தந்ததற்கு நன்றி.காவாக்குடியில் சுடுகாடு சாலை,மின் கம்பம் அமைக்க வேண்டும் என்றார்.

உமாமகேஸ்வரி(திமுக)பேசுகையில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி கொடிமங்கலம்,தாழக்குடி உள்ளிட்ட ஊர்கள் வழியாக அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும்,கீரன்கோட்டகம் மயாணக் கொட்டகை வேண்டும் எற்றார்.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலலித்து பேசிய துணைத் தலைவர் பாலச்சத்திரன் கொரடாச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை திறப்பாக கட்டி முடாத்த கலைவாணன் எம்.எல்.ஏக்கு அனைவரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக முதல்வர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கியதற்கு நன்றி.அதே போன்று மாணவர்களுக்கு ரூ.1000 வழங்க உள்ள முதல்வருக்கு நன்றி.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளுக்கு அலுவலர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.அதற்கு உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

விரைவில் வீடுகள், பேவர் பிளாக் சாலைகளை உடனை முடிக்க வேண்டும்.அதே போன்று கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும்.மாவட்டத்திலிருந்து எவ்வளவு நிதி பெற முடியுமோ அதை பெற்று அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் முடித்து முதல் ஊராட்சி ஒன்றியமாக கொண்டு வர அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். செல்லூரில் கலைக்கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதற்கு அலுவலர் (கி.ஊ) செந்தில் நன்றி கூறினார்.

The post கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: