சாதி, மதம் சார்ந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: ஜம்மு – காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்க சொன்ன விவகாரத்திற்கு கல்லூரி முதல்வர் மறுப்பு..!!

செங்கல்பட்டு: ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரத்திற்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நர்சிங் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களிடம் தாடி வளர்க்கக் கூடாது என்றும் தாடியை மடித்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கல்லூரி நிர்வாகம் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாடியை எடுக்கச் சொல்வதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், கல்லூரி நிர்வாகத்தின் செயல் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாடியை எடுக்கச் சொல்லி நிர்பந்திப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாஸ்கர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் பயிலும் ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் தாடி வளர்க்க தடை விதிக்கவில்லை. சாதி, மத அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தாடியை எடுக்கச் சொன்னதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை; நிர்பந்திக்கவும் இல்லை. ஆடை விவகாரத்தில் மாணவர்கள் நன்னடத்தையை பின்பற்றுமாறு பொதுவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. சாதி, மதம் சார்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

The post சாதி, மதம் சார்ந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: ஜம்மு – காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்க சொன்ன விவகாரத்திற்கு கல்லூரி முதல்வர் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: