சிவகங்கையில் ஆசிரியர் கூட்டணி கூட்டம்

 

சிவகங்கை, மார்ச் 6: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஷ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் அமலசேவியர், சேவியர் சத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் கஸ்தூரி, பஞ்சுராஜ், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், ஜான்கென்னடி, கல்வி மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரசாணை 243ஐ வெளியிட்டதால் தொடக்கக் கல்வித்துறையில் 90 சதவீத ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரிவாக விவாதித்து முடிவு எடுக்க இரண்டு வாரம் கால அவகாசத்தை பள்ளிக்கல்வி செயலாளர் கோரிய நிலையில் அரசாணையை அமல்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்முறைகள் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சிவகங்கையில் ஆசிரியர் கூட்டணி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: