சாப்பிடக் கூப்பிடுவது போல் கூட்டணிக்கு கூவி, கூவி அழைக்கும் அதிமுக, பாஜ: சாத்தூர் ராமச்சந்திரன் கலாய்

அருப்புக்கோட்டை: ஓட்டலுக்கு சாப்பிட வாங்க என அழைப்பதைப் போல அதிமுக, பாஜவினர் கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலாய்த்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நகரில் உள்ள வெள்ளைக்கோட்டை அண்ணா திடலில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதிமுக, பாஜ கட்சியினர் யாருடன் கூட்டணி என்று தெரியாமல் கதவை திறந்து வைத்து யார் வருவார் என்று காத்திருக்கின்றனர். ஓட்டலில் ‘ஒருவர் லைட் அடித்து சாப்பிட வாங்க’ என்று கூப்பிடுவது போல் அதிமுகவும் பாஜவும் லைட் அடித்துக் கொண்டு உள்ளே வாங்க, உள்ளே வாங்க என்று கூட்டணிக்கு பிற கட்சியினரை கூவி கூவி அழைக்கிறார்கள் என்றார்.

 

The post சாப்பிடக் கூப்பிடுவது போல் கூட்டணிக்கு கூவி, கூவி அழைக்கும் அதிமுக, பாஜ: சாத்தூர் ராமச்சந்திரன் கலாய் appeared first on Dinakaran.

Related Stories: