காளஹஸ்தியில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவை தரிசித்த ஏராளமான பக்தர்கள்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கண்ணப்பர் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தென் கயிலாயம் என்றும் பஞ்ச பூத தளங்களில் காற்றுக்குரியதாகவும் அழைக்கப்படுவது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில். இங்கு நேற்று தொடங்கிய மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16ம் தேதி வரை 13 நாட்களுக்கு விமர்சியாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை கண்ணப்பர் மலையில் உள்ள கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் 4 மாட வீதிகளில் வந்த பஞ்ச மூர்த்திகள், திருவீதியுலாவில் ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ஈரோடு அருகே ராட்டைசுற்றி பாளையத்தில் உள்ள பைரவர் கோயிலில், 39 அடி உயர பைரவர் சிலையுடன் தென்னக காசி பைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண், பெண் பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்று மூலவர் சொர்ணலிங்க பைரவருக்கு பாலபிஷேகம் செய்தனர். பின்னர் கோயில் முன்பாக வெண்பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

The post காளஹஸ்தியில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவை தரிசித்த ஏராளமான பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: