தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்

 

தா.பழூர், மார்ச் 2: அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் உள்ளது. இங்கு 11 வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. மைய பெருந்தலைவர் முனைவர்.நடனசபாபதி வரவேற்றார். மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர். அழகுகண்ணன் பத்தாம் அறிவியல் ஆலோசனை குழு கூட்டத்தில் கூறிய ஆலோசனைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்திட்ட அறிக்கை மற்றும் செயல்பாடு அறிக்கை விபரங்கள் மற்றும் மையத்தின் கடந்த ஆண்டில் குறிப்பிடும் படியான சாதனைகள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி வேளாண் அறிவியல் மைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி அர்த்தநாரி, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை இணை பேராசிரியர் இளமதி, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் ரவி சந்திரன், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பாரதிராஜன், ஆகியோர் ஆராய்ச்சி நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

அரியலூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் பாலையா, உதவி இணை இயக்குநர் பழனிச்சாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா, ஜெயங்கொண்டம் செயற் பொறியாளர் பாஸ்கரன், பட்டு வளர்ப்பு துறை ஜோதி, உதவி திட்ட இயக்குனர், தமிழ்மணி, திருச்சி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், வனத்துறை அலுவலர் ஆகியோர் துறைகளில் உள்ள திட்டங்கள் பற்றிய ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் தங்கதுரை, ராஜதுரை, சின்னராஜா, சுஜாதா மற்றும் உமா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் எடுக்கப்பட்ட 25 வெற்றிகரமான விவசாயிகளின் குறுந்தகடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா நன்றி கூறினார்.

The post தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: