வணிகர் நல வாரியம் சார்பில் இரண்டு பேருக்கு குடும்ப நலநிதி உதவி: அமைச்சர் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. 2023-24ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் மட்டும் வணிகவரித்துறையில் வரி வருவாய் பத்தாயிரம் கோடியை தாண்டி ரூ.11,383 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது.

கூட்டத்தின்போது, தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் திருவாரூரை சேர்ந்த சாந்தி தேவி மற்றும் குளித்தலையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் நிர்வாகம் ரத்தினசாமி பங்கேற் றனர்.

The post வணிகர் நல வாரியம் சார்பில் இரண்டு பேருக்கு குடும்ப நலநிதி உதவி: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: