மன்னார்குடி பாமணியாற்றின் குறுக்கே A7 கோடியில் புதிய பாலத்திற்கு அடிக்கல்

மன்னார்குடி, பிப் . 28: மன்னார்குடி கிழக்கு பகுதியோடு திருவாரூர் சாலையை இணைக்கும் வகையில் பாமணியாற்றின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக் கும் பணிகளுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நீண்ட வருட கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேறுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு பகுதியோடு திருவாரூர் சாலை யை இணைக்கும் வண்ணம் பாமணியாற்றின் குறுக்கே புதுப்பாலம் என்ற ழைக்கப்படும் கம்பி நடைப்பாலம் ஒன்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அகலம் குறைவான இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாத சாரிகள் மட்டுமே இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

நகரத்தின் வளர்ச்சி, மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கம் காரணமாக புதுப்பாலம் என்றழைக்கப் படும் கம்பி நடைப்பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங் களும் வந்து செல்லும் வகையில் அகலமான புதிய கான்கிரிட் பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா புதிய பாலம் கட்ட துரித நடவடிக்கை களை மேற்கொண்ட போது பல்வேறு அரசி யல் தலையீடுகள் காரணமாக பணிகள் துவக்குவதில் காலதாமதம் ஏற்பட் டது. இதன்காரணமாக புதிய பாலம் என்பது மக்களின் கனவாகவே மாறிப்போ னது.

இந்த சூழலில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாமணியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் உறுதியளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எம்எல்ஏ டிஆர்பி ராஜா தொடர் முயற்சி காரணமாக பாமணியாற்றின் குறுக்கே 90 மீட்டர் நீளம், 11. 45 மீட்டர் அகலத்தில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தங்களின் நீண்ட வருட கோரிக்கை இந்த அறிவிப்பின் மூலம் நிறைவேற உள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமை ச்சர் டிஆர்பி ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், புதுப்பாலம் அருகே நேற்று முன்தினம் நடந்த விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு பாமணியாற்றின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். விழாவில், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, நகரமன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகர திமுக செயலாளர் வீரா கணேசன், மாவட்ட அவைத் தலைவர் மேலவாசல் தனராஜ், ராஜகோபால சுவாமி கோயில் அறங் காவலர் கருடர் இளவரசன், நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியா ளர் சித்ரா, நகரமன்ற துணைத்தலைவர் கைலாசம், மேலாளர் மீரான் மன்சூர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post மன்னார்குடி பாமணியாற்றின் குறுக்கே A7 கோடியில் புதிய பாலத்திற்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: