ஊத்துக்கோட்டை அருகே ரூ.26.51 கோடியில் துணை மின் நிலையம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை குஞ்சலம் கிராமத்தில் ரூ.26.51 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட துணை மின் நிலையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே குஞ்சலம் கிராமத்தில் எரிசக்தி துறை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில், ரூ.26.51 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 70 எம்.வி.ஏ திறன் கொண்ட 110/33/11 கிலோ வோல்டு துணைமின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர் இதற்காக குஞ்சலம் துணை மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, பூண்டி ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார், செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோர் புதிய டிரான்ஸ்பார்களை இயக்கி வைத்தனர்.

பின்னர், 75 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் வசித்து வரும் வாழவந்தான் கோட்டை பகுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 11 குடும்பத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம், மாமண்டூர், பூண்டி என 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். மின்தடை ஏற்படாமல் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சற்குணம், உதவி பொறியாளர் குமரகுருபரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷித், துணை தலைவர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், நாகராஜ், வக்கீல் சீனிவாசன், கோல்டு மணி, சீனிவாசலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே ரூ.26.51 கோடியில் துணை மின் நிலையம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: