உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சென்னை: நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். உலக செவிலியர் நாள் மற்றும் அன்னையர் நாள் வாழ்த்துக்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

நாம் பிறந்தநாட்டைத் ‘தாய்நாடு’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறோம். அன்னையைத் தெய்வமாகப் போற்றுகிறோம். சங்க காலத்திலேயே நம் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். மன்னர்களாகவும் நல்லாட்சி நடத்தியிருக்கிறார்கள். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் முன்னேற அன்னையின் அரவணைப்பே முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அன்னையருக்கும், புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: