முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்கிறது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்கிறது.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: