பஸ்சில் மாணவிகளுக்கு தொல்லை பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பு: எம்எஸ்சிபிசிஆர் தலைவர் கருத்து

தானே: கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகள் பஸ்சில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில் சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பை ஏற்க வேண்டுமென மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்(எம் எஸ்சிபிசிஆர்) தலைவர் சுசிபென் ஷா கூறினார். கடந்த பிப்ரவரி 20ம் தேதி தானேயில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ- மாணவியர், மும்பையில் காட்கோபருக்கு சுற்றுலா சென்றனர்.

இந்த சுற்றுலாவை பள்ளி நிர்வாகம், தனியார் சுற்றுலா ஏற்பாட்டு அமைப்பிடம் ஒப்படைத்தது. அதன்பேரில், சுற்றுலா சென்ற பஸ்சில் பள்ளி மாணவிகளுக்கு, பஸ் கிளீனர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பஸ் கிளீனரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து எம் எஸ்சிபிசிஆர் தலைவர் சுசிபென் ஷா கூறியதாவது: இந்த விவகாரத்துக்கு பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும். பள்ளி நிர்வாகம்தான், குழந்தைகளின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்படும். மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘பால் சுரக்ஷா அபியான்’ பிரசாரம் தீவிரப்படுத்தப்பட உள்ளது, என்று அவர் தெரிவித்தார்.

The post பஸ்சில் மாணவிகளுக்கு தொல்லை பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பு: எம்எஸ்சிபிசிஆர் தலைவர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: