ஜாபர்கான்பேட்டையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரசார பயணம் சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யாநகரில் இன்று தொடங்கியது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஒவ்வொரு வீடாக நடந்து சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை சொல்லி குறைகளை கேட்டறிந்தார் அப்போது ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்எல்ஏ, பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கே.கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் 23ம் தேதி முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி வாரியான, தலைமை தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களுடன் நடந்த காணொளி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப 26ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பாக நிலை முகவர்கள் வீடுகள் ேதாறும் சென்று ஸ்டாலின் குரல் என்ற புதிய பரப்புரை திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்திருந்தார்.

அதன்படி இப்பகுதியில் இந்த திட்டத்தை சென்னை தெற்கு மாவட்டத்தில் இன்று தொடங்கி உள்ளேன். இந்த மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் பாக முகவர்கள் 4, 5 பேர் சேர்ந்து விருகம்பாக்கம் தொகுதியான அன்னை சத்யா நகரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ளிட்ட 70 ஆயிரம் பாகங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கியும் அரசின் நலத்திட்டங்கள் எதுவெல்லாம் கிடைக்க பெறாமல் உள்ளது, என்ன காரணத்தினால் கிடைக்கவில்லை என்பதையும் பட்டியலிட்டு அதனை பெற்று தருவதாக இது அமைந்துள்ளது.

தற்போது 10 வீடுகளுக்கு சென்று பார்த்ததில் ஒரு சகோதரி, சாலையை உயர்த்தி தந்ததால் மழைநீர் வீடுகளில் புகுந்து விடும் என்றார். நாளையே சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மற்றும் வார்டு கவுன்சிலருடன் வந்து இதனை சரிசெய்யும் பணிகளை செயவார்கள். இதுபோன்ற தீர்வுகள்தான் இல்லந்தோறும் ஸ்டாலின் நிகழ்வு. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக நிர்வாகிகள் குணசேகரன், வாசுகி பாண்டியன், மகளிரணி கனிமொழி தனசேகரன், வடக்கு பகுதி செயலாளர் மு.ராஜா, வட்ட செயலாளர் துரைராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post ஜாபர்கான்பேட்டையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: