குடும்ப அட்டை எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை, தலைமைசெயலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடன் துறைச் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற அறிவிப்புகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் கடந்த மூன்று மாதங்களுக்கான நகர்வு மற்றும் நுகர்வினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

முன்மாதிரி அங்காடிகளாக நியாய விலைக் கடைகளை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினை ஆய்வு செய்தும், ஒவ்வொரு பகுதியிலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் இடங்களில் புதியதாக பகுதி மற்றும் முழு நேர நியாய விலை அங்காடிகளை திறக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிர்வாக இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் (சந்தை) சதிஷ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுக் காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குடும்ப அட்டை எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: